கோலாலம்பூர், ஜன 24: இன்று அதிகாலை கோலாலம்பூர் கம்போங் பாருவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் 38 வெளிநாட்டினரை மலேசியக்குடிநுழைவுத் துறை கைது செய்தது.
அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கிய ஒரு மணி நேர சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 50 வயதுக்குட்பட்ட 24 ஆண்களு ம் 14 பெண்களும் அடங்குவர் என கோலாலம்பூர் மலேசியக் குடிநுழைவுத் துறையின் இயக்குனர் வான் முகமட் சௌபீ வான் யூசோஃப் கூறினார்.
வெளிநாட்டினரின் வருகையைப் பற்றி உள்ளூர்வாசிகளின் அளித்த புகார்களைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் இரண்டு வாரங்களாக உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டது. பிறகு Op Sapu KL Strike Force சோதனை நடவடிக்கை 35 அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
“கைது செய்யப்பட்டவர்களில் 36 இந்தோனேசியர்கள் மற்றும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவர் அடங்குவர்,” என்று அவர் சோதனை நடவடிக்கை முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைகளுக்காக கோலாலம்பூர் ககுடிநுழைவுத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்னர் என்றார்.
– பெர்னாமா