NATIONAL

மித்ராவின் ஜி.டி.எல் உதவி திட்டத்தில் 100 பேருக்கு வாய்ப்பு

கோலா குபு பாரு, ஜன 23 – பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய இளைஞர்களுக்கு உதவும் வகையில் மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவு அறிவித்த ஜி.டி.எல் லோரி ஓட்டுநர் லைசென்ஸ் உதவி திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை நாங்கள் அறிவிக்கும்போது 2000-க்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்தார்கள். ஆனால், நிறைய செயல்முறைகளுக்கு பின்னர் 654 பேருக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கின்றோம் என்று மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

இத முதல் கட்டமாக 100 பேருக்கு இந்த உதவி வழங்கப்பட்டது என்றார். விண்ணப்பத்தாரர்களின் விபரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, இந்த 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் லாரி ஓட்டும் துறைகளில் ஆட்கள் அதிகம் தேவைப்படுவதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, இத்திட்டம் அவர்களுக்குப் பெரிதும் பயனாக இருக்கும் என்று அவர் விளக்கினார்.

மித்ராவின் இத்தகைய திட்டங்கள், மேலும் பல இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி கொள்ள உதவும் என பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :