NATIONAL

அவசரமாகத் தரையிறங்கும் போது ஹெலிகாப்டரில் தீப்பற்றியது – ஒருவர் மரணம்

ஷா ஆலம், பிப். 6 – பகாங் மாநிலத்தின்  கோலாலம்பூர்-பெந்தோங் பழைய சாலையில் தரையிறங்கும் போது  போக்குவரத்து ஹெலிகாப்டரில் தீப்பற்றியது.  இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட வேளையில் மற்றொருவர் உயிர் தப்பினார்.

பெல் 206எல்-4 லோங் ரேஞ்சர் ரக ஹெலிகாப்டர் சம்பந்தப்பட்ட இந்த விபத்து  சுடுநீர் ஊற்று பகுதிக்கு அருகில் நிகழ்ந்து. இந்த தீவிபத்தில் அந்த ஹெலிகாப்டர் முற்றிலுமாக அழிந்தது.

இந்த சம்பவத்தை பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜைஹாம் முகமது கஹார் உறுதிப்படுத்தினார்.


Pengarang :