NATIONAL

ராஜா பெர்மைசூரி அகோங்கின் அடையாளத்தைப் பயன்படுத்தி போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

கோலாலம்பூர், பிப் 6: ராஜா பெர்மைசூரி அகோங்கின் (ராஜா சாரிட் சோபியா) அடையாளத்தைப் பயன்படுத்தி போலி என உறுதிசெய்யப்பட்ட ‘ராஜா சாரிட் சோபியா’ என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் கணக்கு பற்றி சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது.

“இந்தக் கணக்கு போலியானது மற்றும் KDYMM SPB ராஜா பெர்மைசூரி அகோங்கின் அடையாளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளட்து.

“இந்த நடவடிக்கை ஆள்மாறாட்டம் மற்றும் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவது சட்டத்தின் கீழ் குற்றம் என்று வலியுறுத்தப்படுகிறது. மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :