ஷா ஆலம் பிப் 6;-சிலாங்கூர் மாநில பள்ளிகளுக்கான மாநில அரசின் 2025 ம் ஆண்டு மானியத்திற்கான விண்ணப்பங்களை இம்மாதம் பிப்ரவரி 28 ந் தேதிக்கு முன் அனைத்து பள்ளிகளும் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப் படுகிறது.
மாநில அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்யும் பள்ளிகள் அதற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் விதிகளுக்கு ஏற்ப இணையதளத்தின் வழி https://ssipr-daftar.selangor.gov.my/login என்ற விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். கீழ்காணும் போஸ்டரில் கொடுக்கப்பட்ட விவரங்கள் படி விண்ணபிக்கவும் மேற்படி தகவல்களுக்கு [email protected] அல்லது 03-55212595 தொடர்புக்கொள்ளலாம்.
பரிந்துரைகள் மற்றும் விதிகளை பின்பற்றாத பள்ளிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படாமல் போவதை தவிர்க்க பரிந்துரைகளை நன்கு கவனத்தில் கொண்டு செயல்படும் படி பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், மற்றும் பள்ளி வாரியங்களுக்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வேண்டுகோள் விடுத்தார்.