கோலாலம்பூர், பிப் 7: கடந்தாண்டு நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 1,793 குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தஃபா கூறியுள்ளார்.
இதில், ஆக அதிகமாக கோலாலம்பூரில் 507 குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.
“அதனை தொடர்ந்து, கெடா (314), ஜோகூர் (298), சிலாங்கூர் (168), மற்றும் திரங்கானு (124) ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான ஏழைக் குடும்பங்களைக் கொண்டுள்ளன.
“பிற மாநிலங்கள் பின்வரும் எண்ணிக்கை காட்டுகின்றன. அதாவது, கிளந்தான் (81), சபா (80), பினாங்கு (67), பேராக் (57), பகாங் (46), லாபுவான் (43), மற்றும் சரவாக் (8) என பதிவாகியுள்ளன,” என்று அமைச்சகம் நாடாளுமன்ற போர்ட்டலில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தது.
எனினும், மலாக்கா, நெகிரி செம்பிலான், பெர்லிஸ் மற்றும் புத்ராஜெயாவில் மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்கள் எதுவும் இல்லை என டாக்டர் சாலிஹா கூறினார்.