NATIONAL

மருத்துவ  சிகிச்சைக்காகப் பேரரசர் வெளிநாடு பயணம்

கோலாலம்பூர், பிப். 7- மாட்சிமை தங்கிய பேரரசர்  சுல்தான் இப்ராஹிம்  மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.

சுல்தான் இப்ராஹிமின் மகன்களான துங்கு பங்லிமா ஜோகூர் துங்கு அப்துல் ரஹ்மான் அல்-ஹாஜ் இப்னி சுல்தான் இப்ராஹிம் மற்றும் துங்கு புத்ரா ஜோகூர் துங்கு அபு பக்கர் அல்-ஹாஜ் இப்னி சுல்தான் இப்ராஹிம் ஆகியோரும் அவருடன் உடன் சென்றுள்ளனர்

இந்த தகவல்  ஆட்சியாளர்கள் மன்றம் மற்றும் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதை  இஸ்தானா நெகாரா உறுதிப்படுத்தியுள்ளதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரரசர் விரைவில் குணமடையவும் நல்ல  உடலாரோக்கியத்துடன் இருக்கவும்  மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டுமாய் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது.


Pengarang :