NATIONAL

பிற மதப் பண்டிகை கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்க வழிகாட்டல் அவசியமில்லை

கோலாலம்பூர், பிப் 8: பிற மதப் பண்டிகைகளின் கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்பது குறித்து வழிகாட்டிகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இன்று காலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்விவகாரம் இறுதி செய்யப்பட்டதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

ஆகவே, முஸ்லிம்கள் தங்கள் விதிமுறைகளை அறிந்திருப்பதால் விதிமுறைகள் அல்லது வழிகாட்டிகளை விளக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன்.

இன்று பத்து கேவ்ஸ்க்கு வந்துள்ளேன், ஆனால், நான் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. அதே போல் கோபிந் சிங் தமது தொகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அடிக்கடி செல்வார். அவரும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார். எனவே, இது வழக்கமான ஒன்று, அதை சிக்கலாக்காதீர்கள் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

எதிர்வரும் 11ஆம் திகதி கொண்டாடவிருக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலையில் நடைபெறும் முன் ஏற்பாடுகளை நேரில் கண்ட பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, இவ்விவகாரம் தேசிய இஸ்லாமிய விவகார மன்றம், எம்.கே.ஐ கலந்துரையாடல் குழுவின் தலைவரான சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் தெரிவிக்கப்படும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.


Pengarang :