NATIONAL

மாடு மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி

பெரா, பிப் 8 – குவாந்தான், பகாங்கில் மாடு சாலைக்குள் புகுந்ததில் தோட்டத் தொழிலாளியான ஓர் ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்றிரவு 8.55 மணியளவில் பெரா, ஃபெல்டா திரியாங் சத்துவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

25 வயதான முகமட் சுலைமான் தாஹிர், பெரா `MRSM` கல்லூரியிலிருந்து திரியாங் டுவா சாலைச் சந்திப்பு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த சமயம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அவர் ஓட்டிச் சென்ற ஹோண்டா டாஸ் மோட்டார் சைக்கிள், திடீரென சாலையைக் கடந்த மாட்டை மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞர், தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரின் உடல் சவப் பரிசோதனைக்காக தெமெர்லோ சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.


Pengarang :