MEDIA STATEMENTNATIONAL

பாயா ஜெராஸ் தொகுதியில் 300 தாவாஸ் உறுப்பினர்கள் பள்ளி உபகரண உதவி பெற்றனர்

ஷா ஆலம், பிப். 9- பாயா ஜெராஸ்  சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்  சிலாங்கூர்  சிறார்  மரபுரிமை நிதி (தாவாஸ்)  உதவித் திட்டத்தின் கீழ் நேற்று பள்ளி உபகரண  உதவி பெற்றனர்.

சிலாங்கூர் பாரம்பரிய  அறக்கட்டளையின் (யாவாஸ்) முன்னெடுப்பிலான இத்திட்டம் மாணவர்கள் பள்ளி வாழ்க்கையை அதிக உற்சாகத்துடன் தொடங்குவதற்குரிய   ஊக்குவிப்பை வழங்கும் என்று  தாங்கள் நம்புவதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் கூறியது.

2025ஆம் ஆண்டு பள்ளி நுழைவு உதவித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 2025 தவணைக்கான பள்ளி உபகரணப்  பொருட்களை நன்கொடையாகப் பெறும் நிகழ்வில்  300க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் சிறார்களும் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டம்  உதவி தேவைப்படும் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதற்கான  யாவாஸ் முயற்சியின் விளைவாகும் என்று தொகுதி சேவை மையம் முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 29,105 தாவாஸ் உறுப்பினர்கள் பள்ளி நுழைவு உதவியைப் பெற்றதாக யாவாஸ் வர்த்தகத் தொடர்பு   உதவி நிர்வாகி ஷரிசான் முகமது ஷெரீப் கூறியிருந்தார்.

தாவாஸ் என்பது கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாநில அரசின்    நலத் திட்டங்களில் ஒன்றாகும்.  மூன்று வயது ஆகும் முன் பதிவு செய்யப்பட்ட சிலாங்கூரில் பிறந்த  குழந்தைகளுக்கு  18 வயது பூர்த்திடையும் போது 1,500 வெள்ளி வழங்க இத்திட்டம் வகை செய்கிறது.


Pengarang :