MEDIA STATEMENTSELANGOR

ஷா ஆலம் பேரங்காடி  துப்பாக்கிச் சூடு- துப்புரவுப் பணியாளருக்கு காலில் காயம்

ஷா ஆலம், பிப்.  9 – செத்தியா ஆலமில் உள்ள ஒரு பேரங்காடியில் ஆடவர் ஒருவர் நேற்றிரவு  நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  துப்புரவுப் பணியாளருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 30 வயது மதிக்கத்தக்க அந்த அந்நியத தொழிலாளி  சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சிலாங்கூர் மாநில  காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான்    தெரிவித்தார்.

உள்நாட்டவரான  சந்தேக நபர் இரவு 10.00  மணியளவில் பேரங்காடியில்  நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரை அணுகியதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

சந்தேக நபர் துப்பாக்கியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை நோக்கி குறைந்தது எட்டு முறையாவது சுட்டிருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள் என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியப் பின்  சந்தேக நபர் ஒரு வாகனத்தை நிறுத்தி  அந்தப் பகுதியிலிருந்து தம்மை வெளியே கொண்டுச் செல்லும்படி ஓட்டுநரைக் கட்டாயப்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்.

ஷா ஆலம் விரைவுச்சாலை (கெசாஸ்) அருகே சாலையோரத்தில்  இறக்கிவிடுமாறு ஓட்டுநரிடம் சந்தேக நபர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் போலீசில் புகார் அளித்தார் என ஹூசேன் அவர் கூறினார்.

சந்தேக நபர் கடைசியாக இறங்கிய   இடத்தை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அவர் சொன்னார்.

இதனிடையே  அந்த பேரங்காடியைச் சுற்றியுள்ள பகுதி  அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட்டு  பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டு வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

வளாகத்தில் உள்ள அனைத்து  கண்ணாணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்ததாகவும். சூழலும் இடமும் பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்துவதற்கு முன்பு சுற்றியுள்ள பகுதியில் ‘தூய்மைப’ நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :