NATIONAL

செலாயாங் பாருவில் நீர் அழுத்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வெ.70 லட்சம் ஒதுக்கீடு

செலாயாங், பிப்.14 – இங்குள்ள  தாமான் செலாயாங் பாருவில்  6.8  கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய குழாய்களைப் பதிக்க  மாநில அரசு கிட்டத்தட்ட 70 லட்சம் வெள்ளியை  ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்தாண்டு முதல் இப்பகுதியில் நிலவி வரும்  குறைந்த நீர் அழுத்தத்தை பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக  மகளிர் ஆக்கத் திறனளிப்பு மற்றும் சமூக நலத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.

செலாயாங் பாருவில் நிலவும்  குறைந்த நீர் அழுத்தம் குறித்து எனக்கு புகார்கள் வந்துள்ளன.  குறுகிய கால தீர்வாக அடுத்த இரண்டு மாதங்களுக்குள்
ஒரு புதிய நீர் ஆதாரத்தை நாங்கள் அடையாளம் காண்போம்.

இங்கு நிலவும் முக்கிய பிரச்சனை என்னவென்றால், குழாய்கள் மிகவும் பழையவையாகும். மேலும் மேடான நிலப்பரப்பு  குறிப்பாக, அதிகமாக நீர் பயன்படுத்தப்படும் உச்ச நேரங்களில்  சீரான நீரோட்டத்தைத் தடுக்கிறது  என்று தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினருமான அன்ஃபால் இன்று இங்குள்ள தாமான் செலாயாங் பாருவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினய்  அகமது ஜாஹிரி ஜாஹிட் சோபியான் மற்றும் பென்குருசன் ஏர் சிலாங்கூர் சென்.  பெர்ஹாட் நிறுவன விநியோகம் மற்றும் ஒருங்கமைப்பு செயல்பாட்டு (கோம்பாக்) உதவித் துணைத் தலைவர் ஜஹ்லான் சுலைமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நீர் அழுத்தத்தை மேம்படுத்துவதற்கான குறுகிய கால நடவடிக்கையாக
பண்டார்  பாரு செலாயாங்கிலிருந்து தாமான் செலாயாங் பாருவுக்குத் நீர்  திருப்பிவிடப்படும்  என்று ஜஹ்லான் கூறினார்.

குழாயை மாற்றுவதற்கான திட்டம் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டுக்குள் அது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த குறைந்த நீர் அழுத்தப் பிரச்சினையினால்  சுமார் 300 வீடுகளைப் பாதிக்கப்பட்டுள்ளன. குழாய்களை  மாற்றும் பணிகள்  முடிந்ததும் அப்பகுதியில் உள்ள 800 வீடுகள் பயனடையும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :