புத்ராஜெயா, பிப் 14 – பள்ளி மாணவர்களிடையே ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு பிரதமர் விடுத்துள்ள உத்தரவை, கல்வி அமைச்சு ஏற்றுகொண்டுள்ளது.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவுரைக்கு ஏற்ப, கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும். குறிப்பாக மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி புலமைமை அதிகரிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ELTC எனப்படும் ஆங்கில மொழி கற்பித்தல் மையங்களை மறுசீரமைப்பதும் அவற்றில் அடங்கும் என அமைச்சர் ஃபாட்லினா சிடேக் கூறினார்.
வகுப்பறை கற்பித்தலில் ஆசிரியர்களின் ஆங்கில மொழியாற்றலை ELTC-யின் மறுசீரமைப்பு மேம்படுத்தும் என அவர் சொன்னார்.
அதே சமயம், மலாய் மொழியின் மதிப்பை காத்து ஆங்ல மொழியை வலுப்படுத்தும் கொள்கைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இது தவிர, 2013-2025 மலேசியக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 முக்கிய முன்னெடுப்புகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
HIP எனும் திட்டம், DLP எனும் இரட்டை மொழி கொள்கை, இணையம் வாயிலான பள்ளி ஆங்கில மொழி திறன் உயர்த்தும் திட்டம், Pro-ELT எனும் ஆங்கில மொழி ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாடு ஆகியவையே அந்நான்கு அம்சங்களாகும்.