ஜகார்த்தா, பிப் 14 – இந்தோனேசியா, கிழக்கு நுசா தெங்காரவில் உள்ள லெவோதொபி மலையில் எரிமலை செயல்பாட்டின் அளவு மிக அதிகமான நிலைக்கு உயர்ந்துள்ளது.
நிலத்தின் மையப்பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் சுற்றளவில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஏழு கிலோ மீட்டர் சுற்றளவின் தென்மேற்கில் இருந்து வடகிழக்கு பகுதியை தவிர்க்கவும் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெடிப்புகள் தொடர்ந்து எரிமலை பிழம்பு மற்றும் மழை காரணத்தால் நிலச்சரிவு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதால் மக்கள் குறிப்பாக, மலை உச்சிக்கு அருகில் உள்ள ஆறுக்கு அருகில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.