MEDIA STATEMENT

பந்து வடிவிலான பட்டாசு வெடிப்பால் இளைஞரின்  கைவிரல்களில்  பலத்த காயம்

கோத்தா பாரு, மார்ச் 17-   வீசுவதற்குள் வெடித்த பந்து வடிவிலான  பட்டாசு  14 வயது சிறுவனின் வலது கையில் இரண்டு விரல்கள் துண்டிக்கப்படும் அளவுக்கு பலத்தக் காயத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் மச்சாங்,  லபோக்கில் உள்ள கம்போங் பத்து 23 கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை
நிகழ்ந்தது.

தனக்கு தலைவலி இருப்பதாக பாதிக்கப்பட்டச் சிறுவன் மறுநாள் நாள் 11.30 மணியளவில்
தம்மிடம் கூறியதைத் தொடர்ந்து   அவரது கையில் காயம் ஏற்பட்ட விஷயம் தமக்கு தெரியவந்ததாக   அவரின் தாயார் கூறினார்.

நாங்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மச்சாங் மருத்துவமனையிவ் சேர்த்தோம். பட்டாசு வெடிப்பால் அவரது வலது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்புகள் உடைந்தன என்று சித்தி என்ற அந்த மாது தெரிவித்தார்.

மேல் சிகிச்சைக்காக கோல கிராய் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு அவரை கொண்டுச்செல்ல  நாங்கள் கேட்டுக் கொள்ளப் பட்டோம் என்று இன்று பெர்னாமா  தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.

இருப்பினும், இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எந்த  போலீஸ் புகாரும் செய்யப்படவில்லை.


Pengarang :