(ஆர்.ராஜா)
ஷா ஆலம், மார்ச் 20 – வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின்
2025 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான (RIBI) மானியத்திற்கு
ஆலயங்கள் விண்ணப்பம் செய்யலாம்.
வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு நோக்கத்திற்காக வழங்கப்படும்
மானியத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 முதல் மே 9
வரை வரவேற்கப்படும் என அமைச்சு வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மானியத்திற்கான விண்ணப்பங்களை eribi.kpkt.gov.my என்ற
இணைப்பின் வாயிலாக மேற்கொள்ளும்படி ஆலயப் பொறுப்பாளர்கள்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.