MEDIA STATEMENTNATIONAL

திவெட் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு சந்தை 99 விழுக்காட்டை எட்டியது

சண்டகான் , 23 மார்ச் (பெர்னாமா)  — தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, திவெட் மாணவர்கள் சிறந்த திறனை கொண்டிருப்பதால், அவர்களுக்கான வேலை வாய்ப்பு சந்தை கடந்த சில ஆண்டுகளில் 99 விழுக்காட்டை எட்டியுள்ளது.
சொந்த ஆள்பலத்துடன் நிபுணத்துவதை உருவாக்க, தொழில்திறன் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கல்வி அமைச்சின் திட்டத்திற்கு இது இணங்குவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
”இந்தத் தொழிற்கல்லூரியில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்த முயற்சியைப் பயன்படுத்த முடியும் என்பதற்காக இதர தொழில்துறைகளுடன் இணைந்து கடுமையாக முயற்சித்து வருகிறோம்,” என்றார் அவர்.
திவெட் மீது அதிக கவனம் செலுத்தப்படும் நிலையில், சந்தை தேவைகளுக்கு ஏற்ப தொழிற்கல்வி கல்லூரிகளில் உள்ள பாடங்களை மேம்படுத்த வேண்டியிருப்பதால் அக்கல்லூரிகளை புறக்கணக்க முடியாது என்று ஃபட்லினா சிடேக் கூறினார்.
தொழிற்கல்வி கல்லூரிகளை மேம்படுத்தும் பொருட்டு, அதற்கான சிறந்த பாடத்திட்டங்களை அடையாளம் காண உதவுவதில் தொழில்துறையினரும் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Pengarang :