NATIONAL

வழிபாட்டு தலத்தின் ஒவ்வொரு கட்டுமானமும் நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 27 – வழிபாட்டு தலத்தின் ஒவ்வொரு கட்டுமானமும் மதத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை பயிற்சி மையம் பூலாபோலில் நடைபெற்ற 218ஆம் ஆண்டு காவல்துறையினர் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

“நாட்டின் சட்டத்தை நிச்சயம் நிலைநிறுத்த வேண்டும். அந்தப் பள்ளிவாசல் 50 ஆண்டுகளோ, 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததோ அல்லது அந்த ஆலயம் 100 ஆண்டுகள் வரலாறுகள் கொண்டவையாக இருக்கட்டும். அதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

கோலாலம்பூரைச் சுற்றியுள்ள 130 கோயில்கள் அதிகாரப்பூர்வப் பெர்மிட் இல்லாமல் கட்டப்பட்டதாகும் என்றும் அன்வார் கூறினார்.

இருப்பினும், ஒரு தலைவர் என்ற முறையில், எந்தத் தரப்பினரையும் ஒடுக்காமல், துன்புறுத்தாமல், உண்மைகளின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் பள்ளிவாசல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை திட்டமிட்டதுபோல் நடைபெறவிருக்கும் வேளையில் அதில் தாம் கலந்து கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

–பெர்னாமா


Pengarang :