ஷா ஆலம், நவ 27- இயங்கலை வாயிலான நேர்முகப் பேட்டிக்கு தயார்படுத்திக் கொள்வதற்குரிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு இளைய தலைமுறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் காரணமாக பெரும்பாலான முதலாளிகள் வேலைக்கு ஆள் எடுப்பதிலும் அவர்களின் அவர்களின் திறமையை மதிப்பிடுவதிலும் இந்த புதிய அணுகுமுறையை கையாளுகின்றனர் என்று அவர் சொன்னார்.

முதலாளிகளின் முதல் தேர்வாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப ஆற்றலை இளைய தலைமுறையினர் கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோல சிலாங்கூர், சவுஜானா புத்ரா, கோம்பாக் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வேலை வாய்ப்பு சந்தைகளில் பங்கேற்ற 60 நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை நேர்காணலை இயங்கலை வாயிலாக நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை உலு லங்காட்டில் நடைபெறும் வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்கும் 19 நிறுவனங்களில் 12 இயங்கலை வாயிலாக நேர்காணலை நடத்தவிருப்பதாவும் அவர் சொன்னார்.