NATIONAL

 200 கிலோ போதைப் பொருள் கடத்தியதாக மெக்கானிக் ஒருவர் மீது குற்றச்சாட்டு

தவாவ், டிச 4: 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200 கிலோ போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மெக்கானிக் ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

51 வயதான தாய் சீ கியோங்கிற்கு எதிராக வழக்கு நிரூபிப்பதில் அரசுத் தரப்பு வெற்றி பெற்றதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் தற்காப்பு  வாதம் புரிய  நீதிபதி டத்தோ டாக்டர் லிம் ஹாக் லெங்  இம்முடிவை எடுத்தார்.

6 செப்டம்பர் 2021, காலை 7.30 மணிக்கு, தவாவில் உள்ள கம்போங் பத்து பாயுங்கில் 199,950.1 கிராம் மெத்தம் பேட்டமைன் கடத்தியதாகத் தாய் மீது குற்றம் சாட்டப் பட்டது.

அவரின் மீது ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B(1)(a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அதே சட்டப் பிரிவு 39B (2) இன் கீழ் தண்டிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப் பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

கடந்த நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையில் மொத்தம் 5 அரசு தரப்பு சாட்சிகள் விளக்கம் அளிக்க அழைக்கப் பட்டனர்.

நாளை (டிசம்பர் 5) குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் ஹர்மன் ஹுசைன் வழக்கை கையாண்டார். குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் டார்மின் அசோக் ஆஜரானார்.

– பெர்னாமா


Pengarang :