ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

2018 ஆம் ஆண்டு முதல் 24,428 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிப்பு

ஷா ஆலம், டிச 2- கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு நவம்பர் 15 ஆம் தேதி வரை 24,428 சிலாங்கூர் கூ வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவற்றில் மிக அதிகமாக அதாவது 9,294 வீடுகள் “சி“ பிரிவைச் சேர்ந்தவையாகும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இது தவிர, “டி“ பிரிவில் 7,822 வீடுகளும் “பி“ பிரிவில் 4,122 வீடுகளும் “சி“, “டி“ மற்றும் “இ“ பிரிவில் எஞ்சிய வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டதாக மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த வீடுகள் அனைத்தும் சிலாங்கூர் சொத்துடைமை மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்படாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்கப்பட்டன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேம்பாட்டாளரே 100 விழுக்காடு கட்டுமானச் செலவினத்தை ஏற்றுக் கொள்ள வகை செய்யும் குறுக்கு உதவித் தொகை திட்டத்தின் கீழ் மேம்பட்டாளர் கட்டுபடி விலையிலான வீடுகளைக் கட்டுவதை சிலாங்கூர் கூ வீடமைப்புக் கொள்கை நிபந்தனையாக கொண்டுள்ளது என்றார் அவர்.

அந்த வீடுகளை தகுதி உள்ள விண்ணப்பதார ர்களுக்கு வழங்கும்  பணியை மட்டுமே சிலாங்கூர் மாநில சொத்துடைமை மேம்பாட்டு வாரியம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு விற்கப்பட்ட கட்டுபடி விலை வீடுகளின் எண்ணிக்கை குறித்து புக்கிட் லஞசான் உறுப்பினர் எலிசெபத் வோங் எழுப்பிய கேள்விக்கு வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் சார்பாக இங் ஸீ ஹான் இந்த பதிலை வழங்கினார். 

ஒவ்வோரு திட்டத்திலும் நிர்மாணிக்கப்படும் வீடுகளில் 30 விழுக்காடு சிலாங்கூர் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இங் குறிப்பிட்டார்.


Pengarang :