NATIONAL

2024 ஆசிய பூப்பந்துப் போட்டி- காலிறுதிக்குச் செல்ல மலேசியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு

ஷா ஆலம், ஜன 31- எதிர்வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் 2024
ஆசிய குழு நிலையிலான பூப்பந்துப் போட்டியில் குறைந்தபட்சம்
காலிறுதிச் சுற்றுக்கு எளிதாக நுழைவதற்கான வாய்ப்பு மலேசியாவுக்குப்
பிரகாசமாக உள்ளது.

நேற்று நடைபெற்ற இப்போட்டிக்கான குலுக்கலில் மலேசிய ஆண்கள்
அணி சீன தைப்பே, கஸகாஸ்தான், புருணை ஆகிய நாடுகளுடன் ‘பி‘
பிரிவில் இடம் பெற்றது.

எனினும், ‘ஒய்‘ பிரிவில் இடம் பெற்றுள்ள தேசிய மகளிர் பூப்பந்து அணி
தாய்லாந்து ஐக்கிய அரசு சிற்றரசு ஆகிய நாடுகளிடமிருந்து கடும்
போட்டியை எதிர் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தேசிய ஆண்கள் அணி காலிறுதிச் சுற்றுக்கு தேர்வாகும்
வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மலேசிய பூப்பந்து பயிற்சிக் கழகத்தின்
இயக்குநர் ரெக்ஸி மேய்ன்காகி கூறினார்.

குலுக்கல் முடிவின்படி நாம் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் வாய்ப்பினை
பிரகாசப்படுத்திக் கொண்டோம். ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர்
காலிறுதிச் சுற்றுக்கு தேர்வாவது உறுதி என்றார் அவர்.

இவ்வாண்டிற்கான ஆசிய குழு நிலையிலான பூப்பந்துப் போட்டியைச்
சிலாங்கூர் மீண்டும் ஏற்று நடத்துகிறது. இப்போட்டசெதிர்வரும் பிப்ரவரி
மாதம் 13 முதல் 18 வரை செத்தியா ஆலம் மாநாட்டு மையத்தில்
நடைபெறவிருக்கிறது.

உலகத் தரம் வாய்ந்த இப்போட்டியில் உலகம் முழுவதுமிருந்து 300
அனைத்துலக விளையாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளதாக விளையாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி முன்னதாக
கூறியிருந்தார்.

சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் மற்றும் மலேசியப் பூப்பந்து
சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் சிலாங்கூர் முதன் முறையாகக் கடந்த
2022ஆம் ஆண்டு இந்த பூப்பந்து போட்டியை ஏற்று நடத்தியது.


Pengarang :