KUALA LUMPUR, 2 Mac — Presiden Majlis Olimpik Malaysia (MOM) Tan Sri Mohamad Norza Zakaria bercakap pada sidang media mengenai persiapan menghadapi Sukan SEA Hanoi 2021 selepas menghadiri mesyuarat jawatankuasa pemilihan Sukan SEA dan penggulungan akhir di Wisma OCM hari ini. –fotoBERNAMA (2022) HAK CIPTA TERPELIHARA
ECONOMYNATIONALSUKANKINI

2027 ஆம் ஆண்டு சீ விளையாட்டு போட்டியை மலேசியா நடத்தவுள்ளது

ஹனோய், மே 12 – சீ விளையாட்டு கூட்டமைப்பு (SEAGF) மூலம் 2027 ஆம் ஆண்டில் 34வது சீ விளையாட்டுப் போட்டிகளை நடத்த மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சீ விளையாட்டு கூட்டமைப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக ஒப்பு கொள்ளப்பட்டதாக மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் டான்ஸ்ரீ முகமது நோர்சா ஜகாரியா தெரிவித்தார்.

மலேசியா திரும்பியதும் அதிகாரப்பூர்வமாகப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது பைசல் அசுமு ஆகியோருக்கு அறிவிப்பதற்கு மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும்,” என்று அவர் இங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

1965, 1971, 1977, 1989, 2001 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய மலேசியா ஏழாவது முறையாகச் சீ விளையாட்டை நடத்த உள்ளது.

புருனை வெளியேறியதைத் தொடர்ந்து 2027 விளையாட்டுப் போட்டிகளை நடத்த மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் கடந்த ஆண்டு விருப்பம் தெரிவித்திருந்தது.

கோவிட்-19 தொற்றுநோயால் தாமதமான 31வது சீ விளையாட்டுப் போட்டி தற்போது ஹனோயில் நடத்தப்படுகிறது. இன்று இரவு தொடக்க விழா தொடர்ந்து மே 25 ஆம் தேதி விளையாட்டுகள் முடிவடையும்.

கம்போடியா முதன்முறையாக அடுத்த போட்டியை மே 5 முதல் மே 16 வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விளையாட்டுகளை நடத்த உள்ளது, அதே நேரத்தில் தாய்லாந்து 2025 இல் விளையாட்டுகளை நடத்துகிறது.


Pengarang :