ECONOMYMEDIA STATEMENTNATIONAL

6,000 கிலோ மீட்டர் குழாய்களை மாற்ற வெ.10 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 26– சிலாங்கூர், கோலாம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் நீர் சேவையின் தரத்தை உயர்த்த 10 கோடி வெள்ளி 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுமார் 6,000 கிலோமீட்டர் தொலைவுக்கு முதன்மை குழாய்களை மாற்ற இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பயனற்று போகும் நீரின் அளவை வரும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் 25 விழுக்காடாக குறைப்பதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் 33.2 விழுக்காடாக இருந்த பயனற்றுப் போகும் நீரின் அளவை இவ்வாண்டில் 28.6 விழுக்காடாக குறைப்பதில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் வெற்றி கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பயனற்றுப் போகும் நீரின் அளவை 25 விழுக்காடாக குறைக்கும் இலக்கை அடைவதற்கு சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில்  6,000 கிலோ மீட்டர் அளவுக்கு குழாய்கள் பழுதுபார்க்கப்படும் என்று அவர் சொன்னார்.

 


Pengarang :