SELANGOR

B40 இந்தியச் சமூக மாணவர்களுக்கான பொது மற்றும் தனியார் உயர்க்கல்வி நிறுவனக் கட்டண உதவி

ஷா ஆலம், பிப் 8: B40 இந்தியச் சமூக மாணவர்களுக்கான  பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனக் கட்டண உதவிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பிப்ரவரி 24 வரை திறந்திருக்கும்.

சிலாங்கூர் மாநில அரசாங்க நிலைக்குழு சுவரொட்டி அறிவிப்பின் மூலம் யயாசன் வாரிசான் அனாக் சிலாங்கூர் (YAWAS) இளங்கலை கல்விக்கு RM5,000 மற்றும் டிப்ளோமா கல்விக்கு (அதிகபட்சம் RM3,000 வரை) கட்டண உதவி வழங்குகிறது.

“சிலாங்கூரைச் சேர்ந்த இந்தியர்களுக்கு அதாவது சிலாங்கூரில் பிறந்தவர்கள் அல்லது சிலாங்கூரில் குறைந்தது 15 வருடங்களாக வசிப்பவர்களாக இவ் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன.

“விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மலேசியா முழுவதிலும் உள்ள பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) அல்லது தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் (IPTS) படித்துக் கொண்டிருக்க வேண்டும்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

பிற தகுதிகள் குடும்ப வருமானம் மாதத்திற்கு RM2,000 மற்றும் அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.

“இப்பண உதவி காசோலை மூலம் வழங்கப்படும் அல்லது உயர்கல்வி நிறுவனங்களின் பொருளாளர் பெயரில் உள்ள கணக்கிற்கு (EFT) பரிமாற்றம் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பப் படிவங்களை சமூக நலன், ஊழியர்கள் மற்றும் அரசு எஸ்கோ அலுவலகம், மாடி 5, சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு 03-5544 7307/7305, 017-348 4172 என்ற எண் வழி தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.


Pengarang :