NATIONAL

FGV: எஸ்பிஆர்எம், பெல்டா குலோபல் விசாரணையை துரிதப் படுத்த வேண்டும்

 

ஷா ஆலாம் – பெல்டா கிளோபல் வெஞ்சர் ஹல்டின் பெர்ஹாட்டில் நிகழ்ந்திருக்கும் பதவி துஷ்பிரயோகம் குறித்த புகாரினை அலட்சியம் செய்யாமல் அது குறித்த விசாரணையை லஞ்ச ஊழல் வாரியம் (எஸ்.பி.ஆர்.எம்) துரிதப்படுத்த வேண்டும் என கெஅடிலான் கட்சியின் பெல்டா மற்றும் தோட்டத்துறை பிரிவின் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் ஹக்கின் கோரிக்கை விடுத்தார்.
பெல்டா கிளோபல் வெஞ்சரில் பதவி துஷ்பிரயோகம் நிகழ்ந்திருப்பதாக அதன் தலைவரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான ஷக்காரியா ஹர்ஷாட் புகார் செய்திருந்த நிலையில் அது குறித்த எஸ்.பி.ஆர்.எம்_யின் விசாரணை துரிதமாய் இல்லை என்றும் அவ்வாரியம் அதன் விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பெல்டாவில் அன்மையகாலமாய் நிகழ்ந்து வரும் உட்பூசலை சரி செய்வதற்கும் அதனை சரியாக இலக்கை நோக்கி கொண்டு செல்வதற்கு இஃது வழிகோலும் என்றும் கூறிய அவர் மீண்டும் பெல்டா கிளோபல் வெஞ்சர் பெல்டாவாசிகளின் உரிமையை நிலைநாட்டவும் வாய்ப்பாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
எஸ்.பி.ஆர்.எம் இந்த விவகாரத்தில் மெத்தனமாய் நடந்துக்கொள்ளக்கூடாது.ஷக்காரியாவின் புகாரை பார்க்கையில் இதில் கடுமையாக செயல்பாடு நிகழ்ந்திருப்பதை உறுதி செய்யும் அதேவேளையில் இதில் போதுமான ஆதாரம் இருக்கும் என்றும் நம்புவதால் இதனை அவர்கள் விரைந்து நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அதுமட்டுமின்றி,இந்த விவகாரத்தில் ஷாக்காரியாவும் டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட்டும் வெளிப்படையாக விளக்கத்தை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அவர்களின் விளக்கமும் அதன் உண்மை நிலையும் மக்களுக்கு குறிப்பாக பெல்டாவாசிகளுக்கு அதன் உண்மை தெரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் நினைவுறுத்தினார்.
அதேவேளையில்,பெல்டா கிளோபர் செஞ்சரின் முதலீடு பங்குகள் தொடர்ந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்து வரும் வேளையில் அதன் நிர்வாகத்தின் மீதும் பெரும் ஐயமும் நம்பகத்தன்மையும் மக்கள் மத்தியில் சரிந்து வருகிறது.எனவே,இவற்றுக்கெல்லாம் பொறுப்பேற்று டான்ஸ்ரீ இசா பதவி விலகுவதே விவேகம் என்றும் குறிப்பிட்டார்.இதற்கு முன்னர் பண அரசியலில் சிக்குண்ட டான்ஸ்ரீ இசாவிற்கு பெல்டா கிளோபல் வெஞ்சரில் மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அதிலும் முறையான நிர்வாகத்திறன் இல்லாம அந்த கார்ப்ரெட் நிறுவனமும் பெரும் வீழ்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் பதவி விலகுவதே காலத்தின் கட்டாயம் என்றும் கெஅடிலான் கட்சியின் உதவித்தலைவருமான ஷம்சுல் இஸ்கண்டார் தெரிவித்தார்.

shamsul-iskandar-mohd-akin


Pengarang :