SELANGOR

“Meriahnya Raya Bersama PKNS“ கண்காட்சிக்கு 5,000 பார்வையாளர்கள் இலக்கு

கோலாலம்பூர், மார்ச் 11: இங்குள்ள டதூம் ஜெலதெக் ஷாப்பிங் சென்டரில் நடைபெறும் பி.கே.என்.எஸூடன் நோம்பு பொருநாள்  “Meriahnya Raya Bersama PKNS“ கண்காட்சிக்கு 5,000 வருகையாளர்களை  ஈர்க்க சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) இலக்கு கொண்டுள்ளது.

மார்ச் 5 முதல் ஏப்ரல் 21 வரை நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு அற்புதமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், இலக்கை அடைய முடியும் என்று பிகேஎன்எஸ் தொழில்முனைவோர் மேம்பாட்டு மேலாளர் யுசாவதி யூசோப் கூறினார்.

மலாய் சட்டைகள், பாஜு கூரோங், சொங்கோ மற்றும் சம்பின், ராயா அலங்கார பொருட்கள், கேக்குகள் மற்றும் சிப்ஸ் போன்ற ஹரி ராயா பொருட்களை சென்டர் கோர்ட் வளாகத்தில் 20 பிகேஎன்எஸ் தொழில்முனைவோரால் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் ரிம100,000 பரிவர்த்தனைப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பிகேஎன்எஸ் தொழில்முனைவோர் தூதர் டத்தோ ரோஸ்யம் நோர் உடனான ‘சந்திப்பு மற்றும் வாழ்த்து’ அமர்வு, பிகேஎன்எஸ் பிஸ்கிளப் பேஷன் டிசைன் தொழில்முனைவோரின் ஃபேஷன் ஷோ, குடும்ப புகைப்பட பூத் மற்றும் ஒவ்வொரு வார இறுதியில் நடைபெறும் மேடை நிகழ்ச்சிகள் ஆகியவை இந்த கண்காட்சியை உற்சாகப்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

இந்த கண்காட்சி பிகேஎன்எஸ் தொழில்முனைவோர் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான தளமாக இருப்பதுடன், ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் உதவும் என்று நம்புவதாக யுசாவதி கூறினார்.

அதே நேரத்தில், பொதுமக்கள் ஹரி ராய ஐடில்பித்ரி பொருட்களை மலிவு விலையில் வாங்க முடியும் என்றும், இதன் மூலம் ஷாப்பிங் சென்டரில் வணிக நடவடிக்கைகளை அதிகரிக்க உதவுவார்கள் என்றும் அவர் நம்பினார்.

– பெர்னாமா


Pengarang :