ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

myGAP: அனிமேஷன் வீடியோக்கள் தரமான விவசாயப் பொருட்களை மேம்படுத்த உதவுகின்றன

சிப்பாங், மார்ச் 2: பொதுமக்களுக்குத் தரமான பயிர்களை வழங்க ஊக்குவிப்பதற்கான மலேசிய நல்ல விவசாய நடைமுறைகள் திட்டம் (myGAP) குறித்த அனிமேஷன் வீடியோவைச் சிலாங்கூர் அரசு இன்று அறிமுகப்படுத்தியது

 

இந்த முயற்சி விவசாயிகள் முறையான நடவு முறைகளை பின்பற்ற ஊக்குவிப்பதாகவும், இதனால் பாதுகாப்பான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவும் உதவும் என  விவசாயத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

 

சிலாங்கூரில் இதுவரை 1,487 விவசாய பண்ணைகள் சான்றிதழைப் பெற்றுள்ளதாகவும், உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான விவசாயப் பொருட்கள் தரமானவை என்றும் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்

 

அதனால்தான் அதிகமான விவசாயிகள் myGAP சான்றிதழ்களைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமானதாக இருக்கும்போது, ​​நுகர்வோரின் தேவையும் அதிகரித்து, அவர்களின் வருமானம் அதிகரிக்கும்.

 

எனவே, இந்த ஆண்டு மேலும் 380 myGAP சான்றிதழ்களை வழங்க இலக்கு வைத்துள்ளோம். அந்த ஆசையை நிறைவேற்ற வேளாண் துறை பல உத்திகளை வகுக்கும்என்று இன்று காணொளியை வெளியிட்டு அவர் கூறினார்.

 

ஆறு தேனீ மற்றும் கெலுலுட் பண்ணைகள் myGAP AM பெற்றதைத் தவிர, ஆர்கானிக் கருத்தைப் பின்பற்றும் 36 விவசாய மற்றும் கால்நடை பண்ணைகளும் myOrganic சான்றிதழைப் பெற்றதாக இஸாம் விளக்கினார்.

அதே விழாவில், கடந்த ஆண்டு டிசம்பரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 விவசாயிகளுக்கு 500,000 ரிங்கிட் முதற்கட்ட உதவியையும் அவர் வழங்கினார்.


Pengarang :