NATIONAL

Op Selamat 19 நடைமுறைப்படுத்தப்பட்ட நான்கு நாட்களில் 58 இறப்புகள்

கோலாலம்பூர், ஜன. 22: சீனப் புத்தாண்டை முன்னிட்டு Op Selamat 19 நடைமுறைப்படுத்தப்பட்ட நான்கு நாட்களில் நாடு முழுவதும் 58 இறப்புகளுடன் மொத்தம் 52 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் டிசிபி முகமட் நஸ்ரி ஓமர் கூறுகையில், இறந்தவர்களின் எண்ணிக்கை, 38 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள், 14 கார் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள், 3 லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள், 2 பாதசாரிகள் மற்றும் 1 ஜீப் ஒட்டுனர்.

“மேலும் 33 நபர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் மற்றும் 250 பேர் லேசான காயமடைந்தனர்,” என்று அவர் இன்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மொத்த விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 9,198 வாகனங்கள் சம்பந்தப்பட்ட 7,180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக 9,653 சம்மன்களும் அனுப்பப்பட்டுள்ளன என முகமட் நஸ்ரி கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, போக்குவரத்து விளக்கு மீறல்கள்,  வேக வரம்பிற்கு மேல் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்துதல், இரட்டை கோடுகளை வெட்டுதல், அவசரப் பாதையில் பயணித்தல் ஆகிய குற்றங்களுக்காக சம்மன்கள் வழங்கப்பட்டன.

“Op Selamat 19“ கடந்த புதன்கிழமை முதல் ஜனவரி 27 வரை 10 நாட்களுக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டது.

 

– பெர்னாமா


Pengarang :