SELANGOR

RM1,000 உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஷா ஆலம், மார்ச் 14: எதிர்வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை RM5,000 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலாங்கூரில் பிறந்த உயர்கல்விகூட மாணவர்கள் RM1,000 ரொக்க ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

இந்த உயர்கல்வி உதவித்தொகை திட்டம் (HPIPT) 3,000 மாணவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://edanapendidikan.selangor.gov.my ஐ நாடுவதன் மூலம் பூர்த்தி செய்யலாம் என மாநில அரசு செயலாளரின் அலுவலகம் முகநூலில் தெரிவித்தது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நிபந்தனைகளைப் பார்வையிடவும் மற்றும் பதிந்து கொள்ளவும் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

கடந்த ஆண்டு நவம்பரில் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, இத்திட்டத்தைத் தொடர 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மேலும், சிலாங்கூர் மாநில கல்வி உதவித்தொகை நிதியும் (TKWBNS) மாநிலத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக RM9 மில்லியன் நிதியுடன் தொடரப்படும் என அவர் அறிவித்தார்.

இந்த ஆண்டு மொத்தம் 2,500 மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்வதற்காக அவர்களின் சுமையைக் குறைக்க அடிப்படைப் பல்கலைக்கழக கட்டண உதவியைப் (பாயு) பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.


Pengarang :