SELANGOR

RM250,000 செலவில் ஃபுட்சல் மைதானம் நிறுவும் மற்றும் வடிகால் மேம்பாட்டு திட்டம்

ஷா ஆலம், மே 30: தாமான் மெலோர் அம்பாங், அம்பாங் ஜெயா வில் ஃபுட்சல் மைதானம் மற்றும் வடிகால் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு RM250,000 செலவிட்டது.

ஃபுட்சல் மைதானத்தை நிறுவ கிட்டத்தட்ட RM200,000 மற்றும் அவ்விடத்தைச் சுற்றி வடிகால் அமைப்பதற்கு RM50,000 செலவானது.

“இந்தத் திட்டத்துக்காக மக்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். எனவே நிலையான வளர்ச்சி இலக்குகள் மூலம், மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும்   நல்வாழ்வை உறுதிப்படுத்தவும்  நாங்கள் விரும்புகிறோம்” என்று இங் ஸீ ஹான் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தெரதாய் தொகுதியின் ஒருங்கிணைப்பாளரான அவர், அவ்விடத்தில் உள்ள குடியிருப்பாளர்களின் பயன்பாட்டிற்காக மேலும் 13 சிலாங்கூர் பென்யாயாங் திட்டங்களையும் செயல்படுத்திய தாகக் கூறினார்.

“அவை உள்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டங்கள், நிலப்பரப்பை அழகுபடுத்துதல் மற்றும் வெள்ளத்தைத் தணித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் ஆகும்” என்று அவர் கூறினார்.


Pengarang :