ECONOMYMEDIA STATEMENTNATIONAL

RM8 கோடி மதிப்புள்ள வனவிலங்கு உடற்பாகங்கள் கடத்தலை சுங்கத்துறை முறியடித்தது

போர்ட் கிள்ளான், ஜூலை 19 – மரக் குவியல்களுக்கு பின்னால் 8 கோடி ரிங்கிட் மதிப்புள்ள யானை தந்தங்கள், காண்டாமிருகத்தின் கொம்புகள், பாங்கோலின் செதில்கள் மற்றும் புலிப் பற்கள் உள்ளிட்ட வன விலங்குகளின் பாகங்களை கடத்தும் சிண்டிகேட் முயற்சியை ராயல் மலேசியன் சுங்கத் துறை (ஜேகேடிஎம்) முறியடித்துள்ளது.

ஜூலை 10 ஆம் தேதி போர்ட் கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் இந்த கொள்கலன்  கைப்பற்றப்பட்டது, இது வனவிலங்கு பாகங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை தலைமை இயக்குநர் டத்தோ சாசுலி ஜோஹன் கூறினார்.

முன்னதாக, 2012 இல் முறையே RM4 கோடி மற்றும் RM24 லட்சம் மதிப்புள்ள பாங்கோலின் செதில்கள் மற்றும் யானை தந்தங்களை கைப்பற்றியபோது ஜேகேடிஎம் பெரிய வெற்றயைப் பெற்றது.

“ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்ததாக நம்பப்படும் கொள்கலன், ஜோகூரில் உள்ள பாசிர் கடாங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, வேறொரு கப்பலுக்கு மாற்றப்பட இருந்தது. ஆனால், கடத்தல் பற்றிய தகவலைப் பெற்றதும், மேற்கு துறைமுகத்தில் கொள்கலனை இடைமறித்தோம், ”என்று ஜாசுலி இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கொள்கலனை சோதனை செய்ததில், 6,000 கிலோ எடையுள்ள யானை தந்தங்கள், 29 கிலோ காண்டாமிருக கொம்புகள், 100 கிலோ பாங்கோலின் செதில்கள், 14 கிலோ வனவிலங்கு கொம்புகள், 300 கிலோ விலங்கு மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளுக்கு பின்னால் மறைத்து வைக்கப் பட்டிருந்தன.

மற்ற நாடுகளுக்கு பொருட்கள் கொண்டு வரப்படுவதற்கு முன், மலேசியா ஒரு  போக்குவரத்து என்று ஜேகேடிஎம் நம்புவதாக அவர் கூறினார்.

வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் திணைக்களம் வழங்கிய அனுமதிகள் தவிர, அழிந்துவரும் உயிரினங்களுக்கான சர்வதேச வர்த்தக சட்டம் 2008 (சட்டம் 686) இன் மூன்றாவது அட்டவணையின் கீழ் வனவிலங்கு பாகங்களை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஜாசுலி மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், இறக்குமதியாளர் மற்றும் கப்பல் முகவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மலேசியத் துறைமுகங்கள் வழியாக சட்டவிரோதமான அல்லது வரி செலுத்தப்படாத பொருட்களைக் கடத்த முயன்றதற்காக சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 (1) (a) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று ஜாசுலி கூறினார்.


Pengarang :