NATIONAL

STEM கல்வியை வளர்ப்பதற்கான திட்டத்தில் பங்கேற்க ஆசிரியர்களுக்கு அழைப்பு

புத்ராஜெயா, ஜன 19 – அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாட ஆசிரியர்கள் STEM கல்வி மேம்பாட்டு  திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

முன்னோடித் திட்டங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பள்ளிகளில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சகம் RM100,000 ஒதுக்கியுள்ளது.

“STEM கல்வியை மேம்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் அல்லது திட்டங்களை உருவாக்க STEM ஆசிரியர்களுக்கு இரண்டு வார கால அவகாசம் அளிக்கிறேன்.

“நாட்டின் STEM கல்வியின் மேம்பாட்டுக்கு  பங்களிக்க  விரும்பும் ,உள்ளூர் கல்வியாளர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்பது உறுதி செய்ய எங்களை தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் இன்று அமைச்சகத்தில் தனது புத்தாண்டு உரையில் கூறினார்.

இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும், இதில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கலாம்.

“அந்தந்த நிறுவனங்களுக்குள் STEM கலாச்சார சூழலை வளர்ப்பதற்கு யோசனைகளை பங்களிக்கும் திறன் கொண்ட பள்ளிகளை அமைச்சகம் தேர்ந்தெடுக்கும்” என்று ஃபத்லினா மேலும் கூறினார்.

பிப்ரவரி 27 அன்று மத்திய மண்டலத்தில் தொடங்கும் கல்வி உலா கண்காட்சி மற்ற மண்டலங்களில்  தொடர்ந்து ஜூலையில் முடிவடையும்.

– பெர்னாமா


Pengarang :