SELANGOR

மோரிப் சட்டமன்றத் தொகுதியில் 140 பேர் இரத்தத் தானம் செய்தனர்

பந்திங் ,செப் 2- தேசியத் தினத்தை முன்னிட்டு மோரிப் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம் ஏற்பாடு செய்திருந்த இரத்தத் தான முகாமில் 140 பேர் பங்கேற்றனர்.

இந்த இரத்தத் தான முகாம் பந்திங்கிலுள்ள கோல லங்காட் மாவட்ட மன்ற மண்டபத்தில் நடைபெற்றதாக  மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் பஹாருடின் கூறினார்.

கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் இரத்தத் வங்கிக்கு உதவும் நோக்கில் இந்த இரத்த தான முகாம் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு இரத்தத் தானம் செய்வோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்படி உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதையும் ஹஸ்னுல் சுட்டிக்காட்டினார்.

இரத்தத் தானம் செய்வதற்கு மருத்துவமனைக்குச் செல்வதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இது போன்ற இரத்தத் தான நிகழ்வுகள் இம்மாவட்டத்தில் அடிக்கடி நடத்தப்படும் என்று  அவர் மேலும் கூறினார்.

 


Pengarang :