SELANGOR

மேம்பாட்டு திட்டங்கள் மக்களுக்குச் சுபிட்சத்தை தருவதை உறுதி செய்வீர் சிலாங்கூர் அரசுக்குச் சுல்தான் உத்தரவு

ஷா ஆலம், செப் 3-  சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு திட்டங்கள் மாநில மக்களுக்குச் சுபிட்சத்தைத் தரும் வகையில் இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தினார்.

இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்கு கரை இரயில் திட்டத்தின் தடம் மாற்றப்படுவது தொடர்பில் மந்திரி புசார்  டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரியிடம் விளக்கம் பெற்ற போது அவர் இதனைக் கூறினர்.

கோம்பாக்  பகுதியில் உள்ள பாரம்பரியக் கிராமங்கள், பூர்வகுடியினர் குடியிருப்புகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும்  நீர்த் தேக்கங்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கு ஏதுவாக அனைத்து மேம்பாட்டு திட்டங்களிலும் மேற்கண்ட அம்சங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு சுல்தான் கேட்டுக் கொண்டார் எனச் சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறியது.

இந்தக் கிழக்கு கரை இரயில் திட்டத்திற்காக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட  தடத்திற்கு ஒப்புதல் அளிக்க மாநில அரசு கடந்த ஜூலை மாதம் மறுப்பு தெரிவித்திருந்தது.

நீர் பிடிப்பு பகுதிகளின் ஊடாகக் கோம்பாக் மற்றும் செரெண்டா நகரங்களைக் கடந்து செல்லும் வகையில் அந்த இரயில் தடம் அமைந்திருந்தது.

அந்தத் தடத்திற்கு மாற்றாக ஜென்ஜாரோம், ரிம்பாயு, வெஸ்ட் போர்ட் பகுதிகளை மாநில அரசு பரிந்துரை செய்திருந்தது.

 


Pengarang :