SELANGOR

பங்சாபுரி செலாயாங் மூலியா பகுதியை அழகுபடுத்தும் கூட்டுத் திட்டம்

ஷா ஆலம், செப் 3- பத்துக் கேவ்ஸ், செலாயாங் மூலியா அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட அழகு படுத்தும் திட்டம் அப்பகுதிக்கு வசீகரத்தையும் புதிய தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சி.எஸ்.ஆர். எனப்படும் சமூகக் கடப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டதாகத் தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சா கூறினார்.

பொலிவிழந்து காணப்பட்ட அந்தக் குடியிருப்பின் நுழைவாயில் ருக்குன் தெத்தாங்கா சாவடி ஆகிய பகுதிகளை அழகு படுத்தும் பணியில் 20 மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள், அக்குடியிருப்பின் கூட்டு நிர்வாக அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஈடுபட்டனர் என்றார் அவர்.

அந்தக் குடியிருப்புக்கு அழகூட்டும் வகையில் செடிகளை நடுவது, சுவர்களுக்கு வர்ணம் பூசுவது, ஓவியங்களை வரைவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டுத் திட்டம் இந்தத் தொகுதியிலுள்ள இதர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், குடியிருப்பாளர்களும் தங்கள் இருப்பிடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :