SELANGOR

மாநில 2021ம்  பட்ஜெட்டில் மக்கள் கருத்துகளைக் கூற மாநில மந்திரி புசார் அழைக்கிறார்

ஷா ஆலம், செப் 3- எதிர்வரும் அக்டோபர் 30ந்தேதி சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்  மாநில வரவு செலவு திட்டத்திற்குத் தங்கள் கருத்துகளை, எண்ணங்களை அல்லது பரிந்துரைகளை  வழங்க விரும்பும் மக்கள்  அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்க அழைப்பு விடுத்தார் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.

மாநில 2021ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்குத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க விருப்பும் மக்கள் அவர்களின் கருத்துகளை www.amirudinshari.com/selangor2021 என்ற இணையதளத்திற்கு  அஞ்சல் செய்யலாம்.  இந்த இணையதளம் பட்ஜெட் குறித்த பல தகவல்களைக் கொண்டிருக்கும்., தங்கள் கருத்துரைக்கத் தேவையான மாநிலத்தின் சில புள்ளி விவரங்களையும் அது கொண்டிருக்கும் என்றார் அவர்.

இதன் நோக்கம், கூடிய மட்டும்  மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஒரு பட்ஜெட்டை வழங்க மக்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு அவைகளை  இணைத்துக் கொள்வதே ஆகும். இதன் வழி மக்களின் எண்ணங்களையும்  தேவைகளையும்  அரசாங்கம் புரிந்து கொள்ள முடிவதுடன், கூடுமான வரை அவைகளை நிறைவேற்றத் தேவையானவற்றை அரசாங்கம் செய்ய இம்மாதிரி  அணுகு முறைகள்  உதவும் என்றார் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

இந்த இணையதளத்தில் கருத்துகளை இணைக்கவும் மற்றும் புள்ளிவிவரங்கள் காண உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமின்றி  வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களும் வாய்ப்பு  வழங்கப் பட்டிருக்கின்றது. இதன்வழி, மக்களுக்குத் தேவையான மாற்றங்கள் திட்டங்களாக மட்டும் இல்லாமல் காலத்திற்கு ஏற்ற ரீதியில் நவீனமாகவும் இருப்பதற்கு உதவும்.

அரசாங்கத்திட்டங்களில்  வரவு\ செலவுகளை வடிவமைப்பதிலும் மக்கள் கருத்து கூறுவதற்கும், பங்களிக்கவும் வாய்ப்பு வழங்குவது மக்களை அத்திடங்களில் இணைந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. மக்களின்  ஆதரவுடன் திட்டங்கள் நிறைவு செய்யப் படுவதும் நோக்கமாகக் கொண்டது என்றார் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.


Pengarang :