Sebanyak 78 lori tangki, 22 lori tangki besar, 54 tangki statik, 18 pusat khidmat setempat, lapan pili air awam disediakan untuk menyediakan air di kawasan terjejas
NATIONAL

நீர் மாசுபடுவதற்கு காரணமான தரப்பினர் மீது கடும் நடவடிக்கை மந்திரி புசார் எச்சரிக்கை

ஷா ஆலம், செப் 4- ஆற்று நீர் மாசுபடுவதற்கு காரணமாக இருக்கும் அனைத்துத் தரப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்காது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எச்சரித்துள்ளார்.

கோம்பாக், கோங் ஆற்றில் கரைசலை வெளியிட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை
எடுப்பதில்  ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்றும் அவர் சொன்னார்.

லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்படுவதற்கு காரணமாக
இருந்த தரப்பினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விவகாரத்தில்
நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்க மாட்டேன்   என்று அவர்
அறிக்கை ஒன்றில் கூறினார்.

சுங்கை சிலாங்கூர் ஆறு மாசடைந்ததால் ஏற்பட்ட நீர் விநியோகத் தடையினால்
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக 78 டாங்கி லாரிகள், 22 பெரிய டாங்கி லோரிகள் 54 டாங்கிகள், 18 ஓரிட மையங்கள், 8 பொது நீர்க் குழாய்களை
அந்நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

இது தவிர ஐந்து லிட்டர் அளவிலான 23,000 குடிநீர் போத்தல்கள் பொதுமக்களுக்கு
பகிர்ந்தளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளத் தகவலையும் அவர் வெளியிட்டார்.
தூய்மைக்கேடு காரணமாக ஏற்பட்ட துர்நாற்றத்தைப் போக்க 250 கிலோ பொடியாக்கப்பட்ட கரி பயன்ப டுத்தப்படுகிறது என்றும் மந்திரி புசார் சொன்னார்.


Pengarang :