SELANGOR

நீர் மாசுபடுவதைத் தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுவீர் கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

ஷா ஆலம், செப் 4- பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடிய நீர்  தூய்மைக் கேட்டுச் சம்பவங்கள் இனியும் தொடராதிருப்பதை உறுதி செய்ய நீர் பாதுகாப்பு தொடர்பில் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என மாநில அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நீரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக 1999ஆம் ஆண்டு சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய சட்டம் திருத்தப் பட வேண்டும் என்று கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி வலியுறுத்தினார்.

தற்போதுள்ள சட்டங்கள் கடுமையானவையாக இல்லாத காரணத்தால் நீர் பாதுகாப்பு விஷயத்தில் பலர் சட்டத்தை மீறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், சிறைத்தண்டனை மற்றும் கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில்  சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றார்.

இவ்விவகாரம் தொடர்பில் மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும். இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு கட்டாய சிறைத்தண்டனை விதிப்பதற்கு ஏதுவாக 2006ஆம் ஆண்டு நீர் சேவை தொழில்துறை சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பேச்சு நடத்த வேண்டும் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் நீர் வள நிர்வாக சிறப்புத் தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் நஜ்வான் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :