SELANGOR

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டன- மந்திரி புசார். 

ஷா ஆலம், செப் 5 – நேற்று இரவு சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனத்திடமிருந்து தனக்கு கிடைத்த தகவலின் படி நேற்று இரவு 10.30 மணி முதல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டன என மந்திரி புசார்  டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

ஆனால், நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் சேமிப்பு குளங்களையும் இதர  உபகரணங்களையும் சுத்தம் செய்யும் பணிகளுக்கு பத்து மணி நேரங்கள் தேவைப்படும் என்கிறது ஆயர் சிலாங்கூர் நிறுவனம்.

அதன்பின் குளங்களை நிரப்பும் பணி தொடங்கும் என்று  ஆயர் சிலாங்கூர் நிறுவனம்  தனக்கு தெரிவித்துள்ளதாக  தனது செய்தியில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி தெரிவித்தார்

நீரை பகிர்ந்தளிக்கும் பணிகள் சீரானவுடன் நீர் விநியோகம் தொடர்பான அறிவிப்புகளை ஆயர் சிலாங்கூர் நிறுவனம்  வெளியிடும் என்று அவர்  தெரிவித்தார்.

 

 


Pengarang :