NATIONAL

சட்டவிரோத தொழிற்சாலைகளை விரைந்து உடைக்கப் புதிய சட்டம் சிலாங்கூர் அரசு பரிசீலனை

ஷா ஆலம்,செப் 14- சட்டவிரோத தொழிற்சாலைகளை விரைந்து உடைக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றுவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

தனியார் நிலத்தில் கட்டப்பட்டத் தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும பட்சத்தில் சம்பந்தபட்ட உரிமையாளர்களே கட்டுமானங்களை அகற்ற நடப்பில் உள்ள சட்டம் வகை செய்வதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் நிலத்திலுள்ள கட்டுமானங்களை நில உரிமையாளர்களே அகற்றுவதற்கு ஏதுவாக 7ஏ அறிக்கையை சம்பந்தப்பட்ட நில உரிமையாளருக்கு அனுப்ப வேண்டும் என தேசிய
நிலச் சட்டம் கூறுகிறது என அவர் தெரிவித்தார்.

தங்கள் நிலத்திலுள்ள கட்டிடங்களை தாங்களாகவே அகற்ற வேண்டும் என்பது இதனபொருளாகவும் என்றார் அவர்.

தங்கள் பொருள்களை அகற்றுவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டவில்லை எனக் கூறி நில உரிமையாளர்கள் சட்ட ரீதியாக வெற்றி பெற்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க நிலத்தில் கட்டப்பட்ட தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும் 24 மணி நேரத்தில் அதனை உடைக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


Pengarang :