SELANGOR

சாலை நிர்மாணிப்பில் அலட்சியம் காட்டினால் பணி நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்

ஷா ஆலம், செப் 25- சாலை நிர்மாணிப்பில் குத்தகையாளர்கள் அலட்சியம் காட்டும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக பணி நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அடிப்படை மற்றும் பொது வசதிகளுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இசாம் ஹஷிம்  கூறினார்.

கட்டுமானப் பணிகள் அல்லது பராமரிப்புப் பணிகளின் போது கட்டுமானப் பொருள்கள் அல்லது  கிரேன் விழுந்து பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நிகழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் சொன்னார்.

அலட்சியம் காட்டும் குத்தகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதால் போதுக்குவரத்து நிர்வாகம் தொடர்பான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்டத் தரப்பினர் சாலை பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். கட்டுமானப் பணியாளர்களும் துணைக் குத்தகையாளர்களும் விதிமுறைகளை கடைபிடிப்பதையும் கட்டுமானப் பொருள்கள் நல்ல நிலையில் உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

தற்போது நிர்மாணிப்பில் இருந்து வரும் ஷா ஆலம்-உலுகிளாங் அடுக்கு நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவர் கார் மீது விழுந்தது. இம்மாதம் 19ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில்  அக்கார் முற்றாக சேதமடைந்ததோடு அக்காரை ஓட்டிய மாது ஒருவர் லேசான காயங்களுக்குள்ளானார்.

கடந்த 20ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மீது கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று விழுந்த து.


Pengarang :