SELANGOR

தாமான் வாவாசான் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய 8ம் ஆண்டு திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பத்தாங்காளி, செப் 28-  உலுசிலாங்கூர் பத்தாங்காளி  தாமான் வாவாசான்  ஸ்ரீ மகாமாரியம்மன்  ஆலய 8ம் ஆண்டு திருவிழா நேற்று 27-9-2020 ஞாயிற்றுக்கிழமை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டதாக அப்பகுதி இந்தியச் சமூகத்தலைவர் திரு கி. பாலச்சந்தர் தெரிவித்தார்.

அது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், கோவிட் நோய் தொற்று காரணமாக, சுகாதார அமைச்சின்  ஆலோசனைக்கு ஏற்ப ஏழு வயதுக்குக் கீழ் பட்டவர்களும், 70 வயதுக்குப் மேற்பட்ட பக்தர்களும் ஆலயத்தின் உள்ளே  அனுமதிக்கப் படவில்லை என்றார்.

கோவிட் நோய் தொற்று காரணமாக இவ்வாண்டு, எந்தச் சிறப்பு பிரமுகருக்கும் ஆலயம் அழைப்பு விட வில்லை என்றும், இருப்பினும் அந்தக் குறைபாட்டை உள்ளூர்  பிரமுகர்களான நகராட்சி மன்ற உறுப்பினர்கள்  திரு. முரலி மற்றும் இலட்சுமணன், இந்தியச் சமூகத்தலைவர்கள் திரு. ராஜன் கண்ணனுடன் தானும் கலந்து கொண்டு, நிறைவு செய்ததாக அவர் கூறினார்,

சுமார் 300 பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இலவசத் தண்ணீர் பந்தல் மூலம் பக்தர்களின் தாகத்தைத் தாங்கள் தீர்த்ததாகவும், அதனுடன்  சிலாங்கூர் இன்று மாத பத்திரிக்கையும் பக்தர்களுக்கு விநியோகித்ததாகவும் குறிப்பிட்டார்  திரு. கி. பாலச்சந்தர்.

 


Pengarang :