SELANGORYB ACTIVITIES

50,000 பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை- இலக்கை அடைவதில் பணிக்குழு தீவிரம்

கோல சிலாங்கூர், ஏப் 11– புஞ்சா ஆலம் வட்டாரத்தில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தொடர்பான பிரசார இயக்கத்தை சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.

வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் 50,000 பேருக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கதை மேற்கொள்ளும் தங்களின் இலக்கை அடைவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக  அந்த பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

இந்நோக்கத்திற்காக நாங்கள் இருபதாயிரம் பிரசுரங்களை புஞ்சா ஆலம் வட்டாரத்தில் விநியோகித்துள்ளதோடு இருபது பதாகைகளையும் ஆங்காங்கே நிறுவியுள்ளோம். இது தவிர,  தகவல் இலாகா  மூலம் பூஞசா ஆலம் பகுதியில் தினசரி இலவச பரிசோதனை தொடர்பான தகவலை மூன்று முறை ஒலிபரப்புகிறோம் என்றார் அவர்.

புங்ஞா ஆலம், தாமான் சீனார் ஃபாசா 2 இல் உள்ள கோல சிலாங்கூர்  மாவட்ட மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்க்த்தை பார்வையிடடப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, மாநில அரசின் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தங்களுக்கு பெரும் பயனைத் தந்துள்ளதாக இந்நிகழ்வில் கலந்து   கொண்டவர்கள் கூறினர்.

உடலாரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் தாம் இரண்டாவது முறையாக இந்த கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வதாக தமிழ்மணி (வயது 30) கூறினார்.

மாநில மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு பெரிதும் துணை புரியும் இந்த இயக்கத்தை மாநில அரசு தொடர்நது நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :