ANTARABANGSA

முகக் கவரி அணியத் தவறிய தாய்லாந்து பிரதமருக்கு வெ.782 வெள்ளி அபராதம்

ஷா ஆலம், ஏப் 27– பொது இடத்தில் முகக் கவசம் அணியத் தவறியதற்காக தாய்லாந்து பிரதமர் பிராயோட் சான்-ஓ-ச்சாவுக்கு  நேற்று 6,000 பாட் (782 மலேசிய ரிங்கிட்) அபராதம் விதிக்கப்பட்டது.

முகக் கவசம் இன்றி கூட்டம் ஒன்றில் பிரதமர் கலந்து கொண்டதை சித்தரிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலானதைத் தொடர்ந்து அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக பேங்காக் கவர்னர் அஸ்வின் வான்முவாங் கூறினார்.

பேங்காக் கவர்னர் என்ற முறையில் நான் இவ்விவகாரத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றேன். பிரதமரும் இந்த தண்டனையை ஏற்றுக் கொண்டார் என அவர் சொன்னார்.

நாட்டில் குறிப்பாக பொழுது போக்கு மையங்களில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து பொது இடங்களில்  முகக் கவசம் அணிவதை தாய்லாந்து நேற்று முதல் கட்டாயமாக்கியது.

இந்த உத்தரவை மீறுவோருக்கு  20,000 பாட் (2,606 மலேசிய ரிங்கிட்) அபராதம் விதிக்கப்படும்.

தாய்லாந்தில் நேற்று புதிதாக 2,048 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய தினத்தில் நாட்டில் அதிகப்பட்சமாக 11 மரணச் சம்பவங்கள் பதிவாகின.

 


Pengarang :