சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் 18 நாட்களில் 19,000 பேருக்கு தடுப்பூசி

ஷா ஆலம், ஜூலை 26– செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இம்மாதம் 7ஆம் தேதி தொடங்கி இதுவரை 19,236 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் எனப்படும் தொழில் துறையினருக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 14,894 பேரும் செல்வேக்ஸ் கம்யூனிட்டி எனப்படும் பொதுமக்களுக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 4,342 பேரும் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் தனது முகநூல் வாயிலாக இவ்விபரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் கடந்த 18 நாட்களில் 109,547 பேர் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக தெங் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தும் நோக்கில் மாநில அரசு தனது செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தை தொழில்துறையினர் மற்றும்  பொது மக்கள் என இரு பிரிவினரை மையமாக கொண்டு அமல்படுத்தியது.

 


Pengarang :