HEALTHSELANGOR

செல்வேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசி பெற்றவர்கள் செலங்கா சான்றிதழைப் பயன்படுத்தலாம்

ஷா ஆலம், செப் 10- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின்  கீழ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் செலங்கா செயலியில் உள்ள தடுப்பூசி சான்றிதழைப் சான்றாகப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.

மைசெஜாத்ரா செயலியில் தடுப்பூசி தொடர்பான விபரங்களை இன்னும் பெறாதவர்கள் சான்று நோக்கங்களுக்காக அந்த சான்றிதழை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

செலங்கா செயலியில் உள்ள தடுப்பூசி சான்றிதழை சான்றாகப் பயன்டுத்த அனுமதிக்கும்படி சி.ஐ.டி.எஃப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை மன்றத்தை சிலாங்கூர் அரசு வலியுறுத்தியிருந்தது.

செல்வேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசி பெற்ற 159,919 பேரின் பெயர்களை மாநில அரசு மைசெஜாத்ராவுக்கு அனுப்பிய நிலையில் அவர்களில் 3,632 பேருக்கு அந்த செயலியில் இலக்கவியல் சான்றிதழ் இன்னும் இடம்பெறவில்லை என்று சுகாதார துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறியிருந்தார்.

 


Pengarang :