ஆயர் சிலாங்கூர் நிறுவன ஏற்பாட்டில் 200 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

ஷா ஆலம் நவ 1- தீபாவளியை முன்னிட்டு ஜெராம், காப்பார் மற்றும் சுங்கை பிலோக் பகுதிகளைச் சேர்ந்த 200 வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் உணவுப் பொட்டலங்களை வழங்கியது.

பெருநாள் சமயத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார சுமையைக் குறைப்பதில் இந்த  “நம்பிக்கைப் பெட்டி“ விநியோகம் ஓரளவு துணை புரியும் என்று அந்நிறுவனம் கூறியது.

ஒன்றிணைந்து முன்னேறுவோம் எனும் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய நம்பக்கை பெட்டிகள் மலேசிய உணவு வங்கி அறவாரியத்தின் மூலம் ஜெராம், காப்பார் மற்றும் சுங்கை பீலேக்கிலுள்ள 200 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இத்திட்டம் வெற்றியடைவதற்காக பொருள்களை வழங்கி உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

இத்தகைய உதவித் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அந்நிறுவனம், இத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்க விரும்புவோர் 8007985118 என்ற சி.ஐ.எம்.பி. வங்கிக் கணக்கில் நன்கொடைகளை வழங்கலாம் என அது குறிப்பிட்டது.

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள வசதி குறைந்த பி40 குடும்பங்களுக்கு நீர்க் குழாய்களை பழுதுபார்ப்பதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்வது அத்தியாவசியப் உணவுப் பொருள்களை வழங்குவது ஆகிய நடவடிக்கைகளை  கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி மேற்கொண்டது.


Pengarang :