தேவை அதிகரித்த காரணத்தால் கோழி, சமையல் எண்ணெய் விலை உயர்வு

இந்கந்தார் புத்ரி நவ 23- தேசிய மீட்சித் திட்டதின் நான்காம் கட்டத்தில் பொருளாதாரத் துறைகள் திறக்கப்பட்ட காரணத்தால் கோழி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு கண்டுள்ளதாக ஜொகூர் மாநில சட்டமன்றத்தில்  கூறப்பட்டது.

இரண்டு காரணங்களால் கோழியின் விலை உயர்வு கண்டுள்ளதாக ஒற்றுமை, வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சோங் பாட் ஃபுல் கூறினார்.

சோயா கடலை, சோளம் போன்ற கச்சா பொருள்களின் விலையேற்றம், அந்நியச் செலாவணி மதிப்பு அதிகரிப்பு மற்றும் அந்த உணவுப் பொருளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவையே அக்காரணங்களாகும் என்றார் அவர்.

பொருளாதார நடவடிக்கைள் திறக்கப்பட்டதை கோழி வளர்ப்போரும் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக உணவுப் பொருளுக்கான தேவை அதிகரித்து அதன் விளைவாக பொருள்களின் விலையும் உயர்வு கண்டது என்று அவர் தெரிவித்தார்.

சந்தையில் கோழிக்கான தேவை அதிகரிக்கும் பட்சத்தில் தேவையை ஈடு செய்வதற்கு ஏதுவாக உற்பத்தியை அதிகரிக்க கோழி வளர்ப்போருக்கு கால அவகாசம் தேவைப்படும். அதன் பின்னரே அந்த உணவுப் பொருளின் விலையை சீரான நிலைக்கு கொண்டு வர முடியும் என்றார் அவர்.


Pengarang :