வரும் பொதுத் தேர்தலில் கட்சியை வழி நடத்தி வெற்றிபெறும் தலைமையாக இருக்க வேண்டும்

ஷா ஆலம், மே 15: இந்த முறை கட்சித் தேர்தலில் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்களைக் கட்சி பதவிகளுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். அந்தக் குழுவே வரும் பொதுத் தேர்தலில் கட்சியைப் பொதுத் தேர்தலில் வழி நடத்தும்.

சவாலை எதிர்கொள்ளும் அதன் அனுபவம் ஆற்றல் மற்றும் திறன் (GE) நம் கட்சியின் பொதுத்தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால் கட்சி உறுப்பினர்கள் திறமையானவர்களைக் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் பதவிக்குக் கொண்டு வரவேண்டிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

பார்ட்டி கெஅடிலான் ரக்யாத் (கெடிலான்) மகளிர் துணை தலைவர் வேட்பாளர் ஜுவைரியா சுல்கிப்லி கூறுகையில், கட்சியின் கவனம் அடுத்த பொதுத்தேர்தலை வெல்வதே ஆகும், எனவே கட்சியை வலுப்படுத்தச் சிறந்த தலைவரை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். “தேர்தலில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும், சிறந்த தலைவர்களைத் தேர்வு செய்ய வேண்டும், போருக்குச் செல்லும் அனுபவம் உள்ளவர்களே தேர்தலில் நுழைய வேண்டும்.

“இந்த முறை கட்சித் தேர்தல் வெறும் சோதனை மட்டுமல்ல, அனுபவமுள்ள தலைவர்கள், நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவம் மற்றும் சோதிக்கப்பட்ட தலைவர்களே, மக்கள் நம்பிக்கையைப் பெற முடியும்” என்று அவர் நேற்றிரவு பத்து நாடாளுமன்ற மட்டத்தில் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் கூறினார்.

நிகழ்ச்சியில் சிலாங்கூர் கெடிலான் மாநிலத் தலைமையின் தலைவரான டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார். புக்கிட் மெலாவத்தி மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஜுவைரியா, அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் தேர்தல் பிரச்சார செயல்முறை முழுவதும் ஆரோக்கியமான முறையில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார்.

“இந்த முறை தேர்தல் உடன்பிறப்புகளுக்கு இடையே ஆனது, இது குடும்பத் தேர்தல். நாம் சகோதரர்கள், நாம் ஒரு அணியாகப் போட்டியிடுவதால் வதந்தி மற்றும் அவதூறுகளால் எவரையும் கறைபடுத்தாதீர்கள்.

“முதியவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். கட்சியின் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஒருபோதும் எவர் மனதையும் காயப்படுத்தல் ஆகாது என்றார் அவர்.  இந்த விஷயத்தை நாம் மதிக்க வேண்டும், நல்லவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் 2022-2025 காலகட்டத்திற்கான கட்சியின் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றதின் வழி KEADILAN தேசியத் தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.

துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ சைபுடின் நசுதின் இஸ்மாயில் மற்றும் ரபிசி ரம்லி இடையே போட்டி நிலவுகிறது.  துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்த 18 வேட்பாளர்களில் டத்தோ ‘மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரியும் ஒருவர். மற்ற வேட்பாளர்கள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன், தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபட்சில், வனிதா தலைமை புஜியா சலே மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் அடங்குவர்.

சிலாங்கூர் வனிதா தலைவர் ரோட்சியா இஸ்மாயில் மற்றும் டேவான் நெகாரா உறுப்பினர் ஃபத்லினா சிடெக் ஆகியோர் பெண்கள் தலைமை பதவிக்குப் போட்டி இடுகின்றனர், அதே நேரத்தில் AMK தலைவர் பதவிக்கு ஆடம் அட்லி அப்துல் ஹலிம் மற்றும் ஃபஹ்மி ஃபைசோல் ஆகிய இரண்டு முன்னாள் மாணவர் ஆர்வலர்கள் தங்களை முன் வைத்துள்ளனர்.


Pengarang :